பக்கம்:படித்தவள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 Tाd என்று முத்திரை குத்தப்பட்டு விடுகின்றன. அவை கலாச்சாரம் என்று கூறப்பட்டு விடுகின்றன. கோபிக்குக் கோபம் வந்து விட்டது. "நான் கேட்டதற்கு விளக்கம் தராமல் எதையோ உளறுகிறீரே! எனக்கு அந்தச் சொல்லுக்கு நேர்ப் பொருள் வேண்டும்” என்று கத்தினான். "இது ஆசாரம் அல்ல; பொறுமையைக் கடைப் பிடிப்பது ஆசாரம் ஆகும்" என்றார். "நல்லவற்றைக் கடைப்பிடித்தல் என்பது இதன் நேர்ப் பொருள்" என்றார். "பொதுவாகப் பழமை நல்லது என்று கருதப்படுகிறது, காலம் காலமாகத் தொடர்ந்து வருவதால் அவற்றையே "ஆசாரம் என்று கூறும் வழக்கம் வந்து விட்டது” என்றார். 13 ஷோபனா நாடகம் நடித்ததும் அவள் புது உலகத்தில் காலடி எடுத்து வைத்தவள். ஆனாள். 'கலை உலகம்' என்று அதற்குப் பெயர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவள் காலடிகள் மண்ணில் படிய மறுத்துவிட்டன. இறக்கைகள் முளைத்துவிட்டன. அவள் பறக்கத் தயாராக இருந்தாள். அவள் வீட்டில் ஒரு விருந்து தந்தாள். பத்திரிகையாளர் வந்து அவளை நச்சரித்தார்கள். அவளைத் திரை உலகம் அழைத்தது. அதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்தாள்; அதைப் பற்றித் தவறான கருத்துக்கள் பல கேட்டு இருந்தாள். அதனால் குடும்பம் சிதைந்துவிடும் என்று கருதினாள், அவள் தன் கணவனை நேசித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/144&oldid=802457" இலிருந்து மீள்விக்கப்பட்டது