பக்கம்:படித்தவள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 143 இளமை முதற்கொண்டு அவள் பரத நாட்டியம் பயின்று இருந்தாள். அவள் உடல் அதற்காகவே வளைந்து கொடுத்தது; விழிகள் அகலமாக இருந்தன. இடை அளவாக இருந்தது. பட முதலாளிகள் கேட்டுக் கொண்டார்கள். அவளுக்கு மணம் ஆகவில்லை என்று தெரிவிக்கவேண்டும் என்று. அப்படி ஒரு இன்டெர்வியூ கொடுத்தால்தான் மார்க்கட்டு சூடு ஏறும் என்று கூறினார்கள். ஆரம்பமே பொய்யில் தொடங்க வேண்டி இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் துணிந்து நின்றான். எப்படியும் அவள் திரையில் சேர்ந்ததும் தாம் விலகத்தான் போகிறோம்; இப்பொழுதே விலகி நின்றால் போகிறது என்று ஒப்புதல் அளித்தான். பெயர் மாற்றத் தேவை இல்லை என்றார்கள். முன் கூட்டியே தக்க பெயர் வைத்திருந்தார்கள்; ஆனந்தனின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. முதலில் அவளை நடிக்க அனுப்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஒழுங்காகக் கோயிலுக்குப் போய்வந்தவளை மாதர் சங்கத்தில் சேர்த்தது தவறாகப் போய்விட்டது. இன்று மற்றவர்கள் துண்டுதலால் தன் திறமையை உணரத் தொடங்கிவிட்டாள்; மற்றவர்கள் வலை வீசுகிறார்கள்; அவளை இழக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான். நீதிமன்றத்தில் தொழிலுக்குச் சென்றால் அங்கே அவன் தோழர்கள் இவனைப் பாராட்ட ஆரம்பித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/145&oldid=802458" இலிருந்து மீள்விக்கப்பட்டது