பக்கம்:படித்தவள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 एा6# பத்திரிகைகளின் பேட்டிகள்; அவை தரும் ஆருடம்: அவர்கள் வெளியிட்ட நாடகப் போட்டோக்கள். "உனக்கு என்னப்பா! நீ மட்டும் தாஜா செய்தால் போதும் உன் வாழ்க்கை மஜாதான்" என்று நெருங்கிய நண்பர்கள் பேச்சு உரிமை எடுத்துக் கொண்டார்கள். அவன் என்னிடம் வந்து முறையிட்டான். "அப்படித்தான் சொல்வார்கள். அவள் வளர்ச்சிக்கு நீ தடையாக இருக்காதே. இத்தகைய வாய்ப்பு எல்லார்க்கும் கிடைக்காது. கிடைப்பதைத் தவறவிடுவது அறியாமை. பெண்களை இனிப் பூட்டி வைக்கமுடியாது. பூட்டி வைத்தவர்கள் தோற்றுவிட்டார்கள். "எண்ணித் துணிக" என்று என் ஆசிரியர் கற்றுத் தந்த குறளை ஒப்புவித்தேன். ஆனந்தனை அவள் பொருட்படுத்தவில்லை. அவன் இருப்பதையே இருட்டடிப்புச் செய்து நட்சத்திர உலகில் அவள் புகுந்து விட்டாள். 14. ஷோபனா பிரபல நட்சத்திரம் ஆனாள். ஆரம்பத்தில் அவள் குணச்சித்திர நடிகையாக நடிக்கவே ஒப்புக் கொண்டாள். அவள் கவர்ச்சி மிக்க தோற்றம் அவளை மலையாளப் படத்துக்கும் தெலுங்குப் படத்துக்கும் இழுத்தது. அந்த உலகில் கவர்ச்சி நடிப்புக்காக மதிப்பு மிக்கு இருந்தது. ஆடைகளை விலக்கிக் கொண்டாள். அணைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/146&oldid=802459" இலிருந்து மீள்விக்கப்பட்டது