பக்கம்:படித்தவள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 145 மிகுதிக்கு இடம் தந்தாள். அவள் காலடியில் கோடிகள் வந்து விழுந்தன. முரீதேவியை அவள் உதறித் தள்ளவில்லை. பூதேவி அவளைப் பூமேல் வைத்துப் பூசை செய்தாள். அவள் இல்லாத பத்திரிகைகள் இல்லை; அவள் நடிக்காத படங்கள் அதிகம் விலைபோகவில்லை. நண்பன் ஆனந்தன் கூர்க்காவின் காவலில் அந்தஸ்தின் எல்லையில் பசும் புல்தரை முன் இட்ட நாற்காலியில் உட்கார்ந்து அவள் கவர்ச்சிப் படங்களைக் கண்காணித்துக் கொண்டு ஆல்பத்தைப் புரட்டிக்கொண்டு இருந்தான். "இந்தப் படங்களைப் பார்க்கிறாயே! உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? எப்படி நீ அவளோடு விரும்பி வாழ முடிகிறது?" என்று கேட்டு வைத்தேன். "இதனால் பெருமை அடைகிறேன்; அழகு அவளிடம் தழைத்துக் கிடக்கிறது. அதை ரகசியமாக எனக்குமட்டும் என்று மூடி வைக்க முடியாது. பெண்களுக்கும் அழகை மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்ற ஆசை வளர்ந்து விட்டது; அதை இனித் தடுக்க முடியாது. இந்த ஆண்கள் எந்த உரிமைகளை அடைகிறார்களோ அவ்வாறே பெண்கள் அடைகிறார்கள்; அவர்களைத் தடுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/147&oldid=802460" இலிருந்து மீள்விக்கப்பட்டது