பக்கம்:படித்தவள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 . যাওঁ ஆசாரங்கள் என்று பேசப்படுபவை வெறும் தளைகள். அவை களைகள் ஆகிவிட்டன. மனைவி என்பவள் நம் வாழ்க்கைத் துணைவி; அவள் நமக்குக் குழந்தைகளின் தாயாகிறாள்; நமக்குள் உள்ள உறவுகள் பாசபந்தங்கள் இதற்குமேல் நாம் எதிர்பார்ப்பது வீண் சுமை; யாவரும் யாரையும் அடிமைப்படுத்த முடியாது. சின்னச் சின்ன விஷயங்களை மிகைப்படுத்திக்கொண்டு வாழ்வை நாசப்படுத்திக்கொண்டவர்கள் பலபேர்; வீண் பெருமைதான் காரணம். நான் என்ற முனைப்புதான் நம்மை அழிக்கக் காரணம் ஆகின்றது. இந்தப் பழைய புராணக் குப்பைகள் அடிமைத் தளைகள் அவை அழிந்துவிட்டன. நாம் மீண்டும் புதுப்பிக்க முனைந்தால் தோல்விதான் காண்போம். அவள் தனிப்பட்ட தவறுகள் அவள் உரிமைகள். அவற்றைத் தவறுகள் என்று கருதுவதே நாம் செய்யும் தவறுகள்" என்று விளக்கினான். வீட்டுக்கு வந்தேன். என் மனைவியைப் பார்க்கிறேன். அவள் எனக்கு அழகாக விளங்கினாள். "என்ன விசேஷம்?" என்றேன். "நான் குழந்தைக்குத் தாய் என்று பெண் மருத்துவர்கள் கூறுகிறார்கள்” என்றாள். என் மகிழ்ச்சிக்கு அளவு இல்லை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/148&oldid=802461" இலிருந்து மீள்விக்கப்பட்டது