பக்கம்:படித்தவள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ராசீ



சட்டசபையில் சில கேள்விகள் தான் அனுமதிக்கப்படுகின்றன. இஷ்டப்படி எதையும் கேட்டுவிட முடியாது.

அவன் அழித்தான் என்பது செய்தி, எப்படி என்பது அவள் கணவனின் விமரிசனம்; பண்பட்ட அவள் உள்ளம் அதைக் கூறாதது அவள் பெண்மையின் உயர்வை எடுத்துக்காட்டியது; படித்தவள் அவள்; வாழ்க்கையில் நெறிகளைப் படித்தவள் என்பதை அறிந்து பெருமைப்பட்டேன்.

காசு கொடுத்து வாங்கியது; அதன் சுவை மறந்துவிட்டது. ஆனால் சொற்சுவை சோர்வு நீக்கியது. நினைத்துப் நாம் பாராட்டும் கவிதையாக இருந்தது.

2

ன் கதாநாயகி இப்பொழுதுதான் அறிமுகம் ஆகிறாள். அவள் ‘துருதுருப்பாக’ இயங்கிக் கொண்டிருக்கிறாள். “என்னம்மா எப்பெழுதும் சுருசுருப்பாக இருக்கிறாயே” என்று கேட்கிறேன்.

“காசு நாலு சம்பாதிக்க வேண்டும்” என்று கூறுகிறாள். அதாவது படித்துவிட்டு வெளியேறி உலகத்தின் படிகளில் மிதிக்கிறாள். சிட்டுப் பறவை போலக் கட்டு நீங்கிப் பறந்து கொண்டிருந்தாள். ‘பிறை’ வீட்டுச்சிறையில் கிடப்பதைப் போன்ற உணர்வு பெறுகிறாள். அவள் பெயர் ‘பிறைமதி’. அதைச்சுருக்கிப் பிறை என்று கூறுகிறார்கள். முழுப் பெயரில் அவளை வகுப்பு ஆசிரியர்கள் அழைத்துக் கேட்பாள். யாரால் இவ்வளவு பெரிய பெயரைக் கூறமுடியும். அழகான தமிழ்ப் பெயர் அவளுக்குக் கிடைத்தது. ‘பிறை’ என்றுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/16&oldid=1123428" இலிருந்து மீள்விக்கப்பட்டது