பக்கம்:படித்தவள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 tाd; சாவியாவது உறுதி" என்று பேசினான். தலைவரின் கட்டுப்பாடு இல்லாத பேச்சாக அது இருந்தது. இவன் ஏன் இப்படிப் பேச வேண்டும்? காதலுக்கு இவன் காவியம் பாட அவசியம் என்ன? அதை வைத்துப் பிழைப்பு நடத்தும் கவிஞர்களின் சிஷ்யனா இவன்? காதலைத் தவிர வேறு எழுதத் தெரியாத கவிஞர் பரம்பரையில் வந்த ஒவியனா இவன்? காதல் என்பது எழுத்தில் புகுத்தப்படும் மயக்கம்; போதை என்றும் கூறலாம்; அதை இவன் சிறப்பித்துப் பேசியதால் கைதட்டல் வாங்க முடிந்தது. "அஞ்சலை கந்தசாமி திருமணம் எத்தகையது என்பது எனக்குத் தெரியாது; என்றாலும் அவர்கள் கருத்து ஒருமித்துக் கவின் பெறும் வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்து கிறேன்" என்று கற்றவனைப் போலச் சொல்லடுக்குகள் தொடர மேடைவசனம் பேசிக் கைதட்டலைப் பெற்றான். இவன் ஏன் பொருத்தமில்லாத செய்திகளை இங்கே அர்த்தமில்லாமல் அளக்கிறான் என்பது விளங்கவில்லை? அவன் பேச்சை நான் வெறுத்தேன்; அவன் கீழே இறங்கியதும் மறுத்தேன். அவன் மேடையில் இருந்து இறங்கி வந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். "ஏன்'பா கண்டபடி பேசி விட்டாயே" என்று கேட்டேன். "உள்ளபடிதான் பேசினேன். இவள் காதலித்தது ஒருவனை; மணம் செய்து கொள்வது மற்றொருவனை. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/160&oldid=802475" இலிருந்து மீள்விக்கப்பட்டது