பக்கம்:படித்தவள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் - 159 அவள் உணரவேண்டும். அவனும் அறிய வேண்டும் என்றுதான் பேசினேன்” என்றான். "அது தவறு அல்லவா? மேடையில் நீ அவளைக் காட்டிக் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். "பெயரைச் சொல்லிப் பேசவில்லையே: பேச்சு உரிமை உண்டு. நான் ஒரு கலைஞன்; கவிதை நயம்படப் பேசுவது என் கைவந்த கலை; அதனை நா நயம்பட வெளிப் படுத்தினேன்” என்றான். "நீ ஒவியன்: மவுனம் உன் மொழி; உன் கவனம் இப்படித் திசை திரும்பக் கூடாது" என்றேன். "கைதட்டல் வாங்கி விட்டேன் அதனால் நான் கவிஞன்” என்றான். "ஓசைமட்டும் போதாது. யோசனையும் இருக்க வேண்டும்” என்றேன். அவன் சிரித்தான். அவளைப்பற்றி இவன் தெரிந்து வைத்துத் தாக்கினான் என்பது மட்டும் தெரிந்தது. நான் அவனோடு பேசி அவனைத் திருத்த முயன்றேன். "காதலித்து மணம் செய்து கொள்வது காவிய நெறி; அது போற்றத் தக்கதுதான். அந்த உரிமை எல்லாப் பெண்களுக்கும் வாய்க்கும் என்று கூற முடியாது; பெரியவர்கள் முன்னிருந்து பேசி நிச்சயிப்பதுதான் இன்றைய நடைமுறை; இது இரண்டாவது; அவள் ஏற்கனவே காதலித்து இருக்கலாம்; பின் தெளிவு பெற்று இருக்கலாம்: காதலித்தவன் வாழ்க்கைக்கு உறுதி கொடுப்பான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/161&oldid=802476" இலிருந்து மீள்விக்கப்பட்டது