பக்கம்:படித்தவள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 णाd அறுதி செய்ய இயலாது. ஊ தி வைக்கும் பலூன் வெடித்துப் ப்ோக வாய்ப்பு உண்டு. அப்புறம் அது வெறும் ரப்பர் தோல் தான். காதல் சந்திப்புகள் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலைச் சூழல்கள் எனலாம்; அதில் முழுகி எழுந்து, பின் தொடர்ந்து அவனையே மணக்கலாம்; . மணத்துக்கு அது துணையாகலாம்; ஆனால் அதுவே முடிவு என்று கூறமுடியாது. மனம் மாறி விடலாம்; மேல் நாட்டிலும் மணம் ஆவதற்கு முன் இருவரும் சேர்ந்து பழக அனுமதிக்கப் படுகின்றனர்; ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றன. "பிடிக்கவில்லை" என்றால் இடுப்பில் இருந்து கைகள் விலக்கப்படுகின்றன. இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டேன். "எல்லை கடந்து பழகிவிட்டுப் பின் தொல்லை என்று எப்படித் திரும்ப முடியும்?" "காதல் விவகாரமே அப்படித்தான்; தூண்டில் முள் போன்றது தான்; அதில் அகப்படும் மீன் தப்பாது புத்தி சாலிகள் தெளிவு பெறுவதும் உண்டு" என்றேன். "கறைபட்ட பிறகு கரை ஏற நினைப்பது அவர்களுக்கு அது ஒரு குறைதான்” என்றான். "அதுவும் முறைதான்; ஒவ்வொன்றும் ஓர் அனுபவம்தான்; அதிலிருந்து விடுபடுவது தவறு அல்ல: ஒட்டினால் நல்லது என்றால் ஒட்ட வேண்டியது: இல்லை, வெட்டினால் நல்லது என்றால் விட்டு விலகுவது கெட்டிக்காரத்தனம்தான்” என்றேன். அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை; அவனை என்னால் மாற்ற முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/162&oldid=802477" இலிருந்து மீள்விக்கப்பட்டது