பக்கம்:படித்தவள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 163 "எல்லாருக்கும் எதிலும் அவசரம்: பிறக்கின்ற குழந்தைகளும் அவசரப்பட்டு விடுகின்றன” என்றேன். என் தத்துவம் மிகத்துவமாகப் பட்டது. "நாங்கள் எவ்வளவோ; முயன்றோம் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என்று தன் ஆற்ற முடியாத துயரத்தைச் சொல்லி ஆற்ற முனைந்தாள். "அதற்கு என்ன ? வயசு இருக்கிறது: கவலைப் படாதீர்கள்" என்றேன். "அந்த பவிசு எனக்கு இல்லை. மறுபடியும் பிறக்காது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கருப்பை அதன் உருவினைக் கலைத்துவிட்டார்கள்" என்று தெளிவு படுத்தினாள். அதற்குமேல் பேசுவதற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. என்னோடு என் பெயரன் உடன் வந்திருந்தான்; அவள் தொடரும் பேச்சுக்கு அவன் ஆரம்பம் ஆயினான். "இவன் பெயரனா?” "மகனுக்கு மகன் என் பெயரை அவன் தாங்கவில்லை; அவன் பாட்டன் பெயரை அவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள்" என்றேன். "உன் பெயர் என்ன?’ என்று ஆங்கில்த்தில் என் பெயரனைப் பார்த்துக் கேட்டாள். "அமீது" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/165&oldid=802480" இலிருந்து மீள்விக்கப்பட்டது