பக்கம்:படித்தவள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

15


அவளை அழைத்து வருகிறார்கள். அது அவள் முழுப் பெயரின் கடைக் குறை. அவள் மற்றவர்களுக்குப் பிறையாகத் தெரிந்தாள். எனக்கு அவள் மதியாகவே தென்பட்டாள். ‘அறிவு மதி’ என்று ஒரு கவிஞர் கேள்விப்பட்டு இருக்கிறேன். அறிவு என்றாலும் ஒன்றுதான் மதி என்றாலும் ஒன்றுதான். அங்கே அறிவு ஆகிய அறிவு என்பதுபொருள். இங்கே மதி என்பது சந்திரனைக் குறிக்கிறது. பிறைமதி என்றால் பிறைச்சந்திரன் என்பது பொருள். அவள் நெற்றியின் அழகு அந்தப் பெயர் அவளுக்குப் பொருந்தும் எனக் காட்டியது.

என் கெட்ட பழக்கம் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது என்ன செய்வது சிகரெட்டுப் பிடிப்பதை விட இது மேல் என்று கருதுகிறேன்.

“ஏன்′மா நீ சம்பாதித்துதான் ஆக வேண்டுமா?” என்று கேட்கிறேன்.

"“படித்தவள் சும்மா இருக்க முடியுமா?” என்று என்னைத் திருப்பி மடக்குகிறாள்.

“படித்தவள்” அதுதான் பிரச்சனை என்று தெரிந்தது.

“எந்த வேலைக்குப் போக விரும்புகிறாய்?”

“ஏதாவது; என்னால் சும்மா இருக்க முடியாது. படிப்பு எப்பொழுது முடியும் என்று காத்திருந்தேன். அது ஏன் முடிந்தது என்று வருத்தப்படுகிறேன்” என்கிறாள்.

“பாக்கி வைப்பது தானே! ஏதாவது எழுதிக் கொண்டிருக்கலாமே” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/17&oldid=1123429" இலிருந்து மீள்விக்கப்பட்டது