பக்கம்:படித்தவள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 169 "வள்ளி வரை வந்து இருக்கிறேன்" என்றேன். "கெடுத்தவனையே மணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி: காதலித்தவனைக் கொலை செய்கிறாள் மற்றொருத்தி" என்று விளக்கம் கூறினாள். "ஆம்; மக்கள் பாராட்டுகிறார்கள்" என்றேன். "தேவை இல்லை; பெண் காதலித்தவனை அல்லது கெடுத்தவனை மணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கொடுமையான விதி; மனப்போக்குகள், பாலியல் வேறு; மணவியல் வேறு; துணிந்து பிறகு நிதானமாகத் தக்கவனைத் தேர்ந்து மணம் செய்து கொள்ளலாம். இது என் கருத்து" என்று கூறினாள். இந்த விமரிசனத்தில் அவள் சொந்த வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது. "கூட்டுக்குடும்பம் இன்று அதன் பயனை இழந்து விட்டது” என்றாள். "எப்படிச் சொல்கிறீர்?" “விவசாய நிலைக்கு அது தேவைப்பட்டது; இன்று தொழில் நிலைக்கு வந்த பிறகு அவர்கள் பிரிந்து செயல்படுவதுதான் தக்கது; முதியவர்களைக் கவனிப்பது வேறு; அவர்கள் ஆதிக்கம் தொடர்வது வேறு" என்று விவரித்துப் பேசினாள். பிறகு பொது விஷயங்கள் அதிகம் பேசவில்லை; "புத்தக வியாபாரத்தை விட்டு விட்டுத் தன்னோடு ஊர் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/171&oldid=802487" இலிருந்து மீள்விக்கப்பட்டது