பக்கம்:படித்தவள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் 171 "அவள் பிடிவாதமாக இருக்கிறாள் நான் இன்னொரு மணம் செய்து கொள்ளவேண்டும் என்பதில். அவள் பிள்ளை பெற்றுத்தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்." "நீ என்ன செய்யப் போகிறாய்." "எனக்கும் ஓர் எழுத்து ஆசிரியைக்கும் தொடர்பு உண்டு; எப்பொழுதாவது நான் அவளுக்குப் பயன்படுவேன். அவளை மணக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றான். "பின்னால் சிக்கல்கள் வரும்; யோசித்துச் செயல்படு” என்றேன். அவன் காசெட்டுகள் கேட்டுப் பெற்று விடை பெற்றான். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கந்தசாமியின் மனைவி அஞ்சலை என் வீட்டுக்கு வந்தாள். என் மருமகளைப் பார்க்க வந்தாள் என்பது தெரிந்தது; வரவேற்றேன். என் பேர்த்தி மீனாட்சியின் சிரிப்பு அவளை மிகவும் கவர்ந்தது. - பிறகு நேரே பேச்சுக்கு வந்தாள். "எனக்கு நீங்கள் அடைக்கலம் தரவேண்டும்" என்றாள். "இடைக்குல மடந்தையர் கண்ணகிக்கு அடைக்கலம் தர" என்றேன். "நான் உன் மருமகளோடு டெல்லிக்குப்போய் அங்கே இருந்து ஏதாவது தொழில் செய்யப் போகிறேன்' என்றாள். “கந்தசாமி ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/173&oldid=802489" இலிருந்து மீள்விக்கப்பட்டது