பக்கம்:படித்தவள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 शााdf இந்தப் பூவுலகில் பெண்களே இருக்கமாட்டார்கள்" என்று அறிவுறுத்துகிறாள். "தாயை வெட்டச்சொன்ன ஒரு முனிவன். ஜமதக்கினி முனிவன் என்று நினைக்கிறேன்." "ஆமாம்" "தவறு செய்யாதவர்கள் தேடித் தேடிக் கண்டால் இலக்கிய உலகில் ஒரு கண்ணகி ஒரு சீதை இப்படித்தான் காண முடிகிறது. அதனால்தான் அவர்களைப் பற்றிக் காவியம் பாடினார்கள். மற்றவர்களைப் பற்றி விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை" என்றேன். "நீ காதலிக்கும் பூலன்தேவி அவர்கள் அபிப்ராயம் கேள். நானும் கேட்கக் காத்திருக்கிறேன்" என்றேன். எழுத்துக்காரர் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன். "நான் இவரை மணம் செய்து கொள்ளத் தடை இல்லை; ஆனால் சுத்தமான தேங்காய் எண்ணெய்; கலப்படமில்லாதது தேவை என்றால் என்னை இவர் மறந்து விட வேண்டியதுதான்" என்றாள். . "மற்றும் என் சொந்த வாழ்க்கையை உங்களிடம் விமர்சிக்க விரும்பவில்லை. கந்தசாமி கண்திறந்து பார்க்க வேண்டும்; அவன் மனைவி டெல்லிக்குச் சென்று விட்டாள். அவள் தக்க காதலனைத் தேடிக் கொள்ள முடியும். அவள் அழகு, அறிவு, ஆற்றல் அதை அறிபவன் இல்லாமல் இருக்கமாட்டான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/176&oldid=802492" இலிருந்து மீள்விக்கப்பட்டது