பக்கம்:படித்தவள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 गाdf "அதற்கு ஏன் அவனை அடிக்க வேண்டும்?" என்று கேட்டேன். "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று உள்ளே இருந்தவனின் தோழன் உளர வாய் எடுத்தான். அதைத் தாங்கும் சக்தியை வரவழைத்துக் கொண்டேன். "நாங்கள் எதிலும் பாதி தந்து விடுவோம். இவன் பொய்க் கணக்குத் தந்தான்; மாட்டிக் கொண்டான். மாமூல் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான்" என்றான். அவன் சொல்லியதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை; இவர்கள் ஒரே கூட்டம்; இப்படித்தான் சொல்வார்கள் என்று பட்டது. காவலர்கள் நீதிகளைக் காப்பவர்கள்: நிச்சயம் நேர்மை தவறமாட்டார்கள்; இவர்கள் கூறுவது அவதூறு என்று எனக்குப் பட்டது. "அந்த சப்-இன்ஸ்பெக்டர் எனக்குத் தெரிந்தவன். எம்.ஏ. பட்டதாரி, முதல் மதிப்பெண் வாங்கித் தங்கப் பதக்கம் பெற்றவன்; சமுதாய சேவைகள் செய்து நற்சான்றுகள் புெற்றவன்; நிச்சயம் அவன் தவறு செய்ய மாட்டான்” என்று வாதாடினேன். “೨/೧೯r வேலைக்குச் சேர்ந்தபோது அவன் கொடுத்த தொகை இரண்டு லட்சம்; இது உங்களுக்குத் தெரியுமா" என்று அந்தக் குற்றவாளி திருப்பிக்கேட்டான். "எனக்கு ஆளும் கட்சி மீது அபார நம்பிக்கை இருக்கிறது. மக்கள் ஏராளமான வோட்டுகள் தந்து இவர்களைத் தேர்ந்து அனுப்பி, இருக்கிறார்கள். நிச்சயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/184&oldid=802501" இலிருந்து மீள்விக்கப்பட்டது