பக்கம்:படித்தவள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 शा४ மாணவனை முட்டி போடவைக்கும் ஆசிரியர்கள்தான் என் நினைவுக்கு வந்தார்கள். "உங்கள் பிராது என்ன?’ என்று கேட்டார். "எங்கள் வட்டாரத்தில் மெட்ரோ தண்ணிர்கொண்டு வருவதே இல்லை. அந்த வாரிய அதிகாரி இளைஞர்; நிறைய பணம் வசூல் செய்கிறார். குடத்துக்குப் பதினைந்து காசு வசூல் செய்கிறார்கள்; அதில் பாதி அவர் கைக்குச் செல்கிறது. நாங்கள் பணம் தருவதில்லை என்பதால் லாரி அனுப்ப மறுக்கிறார்” என்று கூறினேன். "நீங்கள் அவர் மேலதிகாரிகளிடம் முறையிடுங்கள்; அவர்கள் கவனிப்பார்கள்" என்றார். - "அதிகாரிகள் என்றால் நீங்கள் தான் எங்களுக்குத் தெரிகிறீர்கள். தவறு நடந்தால் உங்களிடம் வருவது பழக்கம் ஆகிவிட்டது." "தனிப்பட்டவர்கள் தவறு செய்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." "அரசாங்க அதிகாரிகள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. தயவு செய்து நீங்கள் போய் வரலாம்" என்று கூறினார். "அவர் எங்களை மதிக்கமாட்டேன் என்கிறாரே." "போய் ரகளை செய்யுங்கள்; அதற்குப் பிறகு நாங்கள் வருகிறோம்" என்றார். இவர் வந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பார் என்பது எனக்குத் தெளிவு ஆகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/186&oldid=802503" இலிருந்து மீள்விக்கப்பட்டது