பக்கம்:படித்தவள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 贷87 ஈடுபட்டு இருக்கிறார். அது முடிந்ததும் வந்துவிடுவார்" என்று அடுக்கிக் கொண்டே போனார்கள். "இசையியக்குநர் இளையராஜா பாரதி ராஜா அல்ல” என்று திருத்தினேன். "நாங்கள் பேதம் பாராட்டுவது இல்லை; இரண்டு பேரும் எங்களுக்கு ஒன்று தான்" என்று அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டார். "கோயில் விழாவுக்குச் சினிமாக் கலைஞர்கள் தேவைதானா, ஏன் கால்ட்சேபங்கள் என்ன ஆயிற்று?" என்று கேட்டேன். "கூட்டம் கூட மறுக்கிறார்கள். மூத்த வயதினர் கூட இப்பொழுது திரைக் கலைஞர்களைத் தான் விரும்பு கிறார்கள்; நாங்கள் என்ன செய்வது?" என்று கேட்டார். "நான் நாத்திகன்: கோயிலுக்குத் தருவது இல்லை" என்றேன். அவர்கள் ஆஸ்தியே பறி போய்விட்டதுடபோல் அதிர்ச்சி அடைந்தனர். "கடவுள் இல்லை என்று கூறியவர்கள் எல்லாம் இன்று கட்சி மாறிவிட்டார்கள். எல்லாம் சரணாகதி அடைந்து விட்டார்கள். அப்படிச் சொல்கிறவர்கள் ஒரு நாளைக்குத் தவறுகளை உணர்வார்கள். மனிதன் மதத்தில் ஏறிவிட்டான் என்று பாடிய கவிஞர்கள் எல்லாம் படி இறங்கி வந்து விட்டார்கள். கஷ்டம் வரும்போது தானாக நீர் மாறி விடுவீர்” என்றார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/189&oldid=802506" இலிருந்து மீள்விக்கப்பட்டது