பக்கம்:படித்தவள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

17




“அரை கிலோ கத்தரிக்காய்; கால்கிலோ சுண்டைக்காய், ஒரு கிலோ வெண்டைக்காய்” என்று அடுக்கிக் கொண்டே சென்றாள்.

“இதுதானா ஷாப்பிங்க்?”

அவள் சிரித்தாள்.

‘கடைக்கு’ என்றால் அது அகெளரவம். அதற்காக இந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். அந்தஸ்து இதனால் உயர்கிறது” என்றாள்.

படித்தவள் சாமர்த்தியமாகப் பேசுகிறாள்.

“அதற்கு ஸ்கூட்டர் எதற்கு ?”

“வாங்கியாகி விட்டது; பயன்படுத்த வேண்டாமா?” என்றாள்.

“உனக்கு எதுக்கு ஸ்கூட்டர்?”

“வசதி இருக்கிறது; அதை விளம்பரப்படுத்துவதற்கு” என்றாள்.

“தேவைக்கு மேல் எதுவும் வைத்திருக்கக் கூடாது” என்றேன்.

“இரண்டு பிள்ளைகளுக்குமேல் ஒருவருக்கு இருந்தால்” என்றாள்.

“ஒன்றே போதும்; மற்றொன்று தேவைக்கு மீறியது” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/19&oldid=1123431" இலிருந்து மீள்விக்கப்பட்டது