பக்கம்:படித்தவள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 189 "கோயில் புனிதமான இடம். அங்கே இந்தக் கலைநிகழ்ச்சிகள் எதற்கு?" என்றேன். "கலை நிகழ்ச்சிகள் மக்களுக்குத் தேவை; அது எந்த இடத்திலும் தரலாம்; இன்று மக்கள் சோர்ந்து இருக்கிறார்கள்: அவர்களுக்கு இவை தேவைப்படுகின்றன. கட்சிக் கூட்டங்களுக்குச் சென்ற பழக்கம், இப்படித் திசைமாறுகிறது; அரசியலில் அவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது; கூட்டங்களும் நடப்பது இல்லை தேர்தல் காலம் தவிர.." என்று விளக்கம் தந்தாள். "இத்தகைய நிகழ்ச்சிகளை வைத்தால்தான் கோயிலில் சுறுசுறுப்பு ஏற்படும்; கவர்ச்சி என்பது தேவைப்படுகிறது: அதற்குக் கோயில் விதிவிலக்கு அல்ல" என்றாள். அவளை எதிர்க்கும் ஆற்றல் இல்லை; அவர்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்; கடவுளிடம் உடன்பாடு எனக்கு இல்லை; மக்கள் கருத்துக்கு நான் மதிப்புத்தர வேண்டியதாகிவிட்டது. அதைவிட எங்கள் குடும்பத்தில் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையும் தேவைப்படுகிறது, விட்டுக் கொடுப்பதால் என் மனைவியின் நன்மதிப்பு எனக்குக் கிடைக்கிறது. அவள் விருப்பப்படி பெரிய தொகை அவர்களுக்குக் கொடுத்தேன். . ரசீது தர வந்தார்கள். "தேவை இல்லை" என்றேன். "இல்லை; வைத்திருங்கள்: உங்கள் பெயர்களைப் பட்டியல் இட்டு அச்சிடுவோம். அடுத்த ஆண்டும் வந்து கேட்க இது சவுகரியமாக இருக்கும்" என்று கூறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/191&oldid=802509" இலிருந்து மீள்விக்கப்பட்டது