பக்கம்:படித்தவள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 शााdf அவர்கள் புத்தி சாதுர்யம் என்னை வியப்பில் நிற்க வைத்தது. "இந்தப் பணத்தைக் கலைஞர்களுக்குத் தரப் போகிறீர்கள்: மிச்சம் என்ன இருக்கும்?" என்று கேட்டேன். "அது தான் இல்லை; ஒசியில் வருவார்கள்; அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற வேண்டியுள்ளது; மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அது படம் ஒடத் துணை செய்கிறது; நடிப்புத்திறமை மட்டும் வெற்றி தருவது இல்லை; மக்கள் விரும்பும் பாத்திரங்களில் நடிக்க வேண்டும்." "அதுமட்டும் அல்ல; ஒய்வு பெற்ற பிறகு சாய்வு தேவைப்படுகிறது. அரசியல் அவர்களை அழைக்கிறது. அவர்கள் ஒதுங்கி வாழ முடியாது. இந்த விழாக்களுக்கு அவர்கள் காசு கேட்காமல் வருகிறார்கள்” என்று விளக்கம் தந்தார்கள். "அவர்களுக்கு நாங்கள் மேடைகள் அமைத்துத் தருகிறோம். எங்கள் குடும்பத்திற்கு அடுத்து அவர்களைத் தான் நேசிக்கிறோம்; அவர்களை அழைக்கிறோம்; அவர்கள் வருவதற்கு யோசிப்பது இல்லை" என்ற மேலும் கூறினார்கள். "நீங்கள் நாத்திகர் என்று கூறுகிறீர்கள்; அறிவு விளக்கம் தரலாம்; ஆனால் எங்களுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேவைப்படுகின்றன. ஒன்று கோயில்; மற்றொன்று கலை; இவற்றை இணைப்பதால் எந்தத்தவறும் இல்லை" என்று விளக்கம் தந்தார்கள். சிந்தித்துப் பார்க்கிறேன். என்னால் முடிவு காண இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/192&oldid=802510" இலிருந்து மீள்விக்கப்பட்டது