பக்கம்:படித்தவள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 என் நண்பன் என்னைப் பத்திரிகை படி என்று என்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது. "கிரைம்களை ஒதுக்கக் கூடாது" என்று அவன் சொன்னான். எனக்கு அவற்றைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. "போலீசு அதிகாரி ஐ.பி.எஸ். வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நுழைந்தார்கள். ஒரு கோடி ரூபாய் நோட்டுகளும், தங்க ந்கைகளும், போதைப் பொருள்களும் பிடிபட்டின" என்பதைப் படிக்கிறேன். தர்மத்தில் எனக்கு இருந்த நம்பிக்கை என்னிடம் - விடுதலை பெற்று விட்டது. இந்த ஐ.பி.எஸ். அதிகாரி யார் என்று துருவிப் பார்த்தேன்; எனக்கு வேண்டிய குடும்பம் அது. இப்பொழுது அவர் மனைவியார் ஒரு சீமாட்டியாக வாழ்கிறார். டி.வி.யில் அவர்களை அடிக்கடி அழைத்துச் சமூகச் சீர்கேடுகளை விமரிசிக்கச் செய்கிறார்கள். அந்த அம்மையார் ஒரு மிராசுதாரரின் ஒரே மகள்: அவர் தன் மகளை ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரி இளைஞர் ஒருவருக்குத் தருவதில் உறுதியாக இருந்தார். டாக்டர் இன்ஜினியர்கள் மணச்சந்தையில் இவர்களை நோக்க ஒளிவிட முடியவில்லை. இந்த முடிவை அவர் ஒரு சாதனையாக மேற் கொண்டார். அவர் கொடுத்தது எவ்வளவு? என்ன செய்தார்? என்ற விவரம் எனக்குத் தெரியாது. ஐ.பி.எஸ். அவர் மருமகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/193&oldid=802511" இலிருந்து மீள்விக்கப்பட்டது