பக்கம்:படித்தவள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ராசீ



“அழகும் தேவைப்படுகிறது; அதை விலைக்கு வாங்கிக் கொண்டேன்” என்கிறார்.

“உங்களுக்கு என்ன சார் கோடீசுவரன் ஒன்று என்ன இன்னும் இரண்டு மூன்று கூட.”

“நேரம் இல்லை என்ன செய்யறது. ஒன்றோடு நிறுத்திக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.” என்றேன்.

இதைக் கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தது அவருக்கு.

“சார் எனக்கு ஒரு சந்தேகம்; பெண் கள்ளா? காவியமா?” என்று கேட்டார்.

“ஆரம்பத்தில் கள்; வெறி கொள்ளச் செய்கிறாள். பிறகு காவியம் நமக்கு நெறிகளைச் சொல்லிக் கொண்டே இருப்பதால்” என்றேன்.

“ஏன் சார் பெண் லட்சணமா இருக்கிறாள் என்று சொல்கிறார்களே. எதை வைத்துச் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

“லட்சுமிகரமாக இருக்க வேண்டும்; அதற்கு அவள் லட்சாதிபதிமகளாக இருக்க வேண்டும். அவள் தாமரையில் குடியிருப்பாள்; தரையில் இறங்கமாட்டாள். அவள் நிறம் சிவப்பு: சரசுவதி வெள்ளை நிறம், உமை கறுப்பு; இப்படித் தெய்வங்களையும் நிறம் கூறித் தரம் பிரித்து இருக்கிறார்கள்.

பிரமன் பார்ப்பனன்; வேதம் ஒதுபவன்; அவன் கலைமகளைத் தேடிக்கொண்டான்; பெருமாள் அவன் பெரும் ஆள்; பணத்தைத் தேடிக் கொண்டான்; சிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/34&oldid=1123446" இலிருந்து மீள்விக்கப்பட்டது