பக்கம்:படித்தவள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

35


கிடந்தார் போனார் என்று அவர் பெயர் எடுத்தார். நான் பிறந்தேன்; அதனால்தான் அவர் இறந்தார் என்ற கதை வலுப்பெற்று விட்டது. ரொம்பவும் வருத்தம் தான். என்னால் ஒருவர் இறந்தார் என்று எப்படிக் கேட்டுக் கொண்டு இருக்க முடியும். ஏன் பிறந்தேன் என்று சில சமயம் எண்ணுவது உண்டு. கஷ்டம் வரும்போது எண்ணுவது உண்டு. என் மாமன் சாவின் பேச்சு வரும்போது இப்படி எண்ணுவது உண்டு.

இதை நம்பத் தயார் இல்லை என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். மற்றவர்கள் நான் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவிரும்பினேன்.

அவரிடம் இதை விவாதிப்பேன். காக்கை ஏறப் பனம் பழம் விழுந்தது என்னும் போக்கை அவருக்கு எடுத்துக் காட்டுவேன். அந்தப் பண்ணையார் நான் சொல்வது எண்ணிப் பார்க்கவும் மறுத்துவிட்டார். தம் சாதகத்திலும் தம் மகன் பாதகம் ஆவான் என்று எழுதி இருப்பதாக எடுத்துச் சொல்வார். அவனுக்கு மணம் ஆனால் மகன் பிறப்பான்; பிறந்தவன் சும்மா இருக்க மாட்டான்; வளர்வான். அவன் வளர்ந்து இரண்டு ஆண்டுகளில் தனக்குத் தீபம் ஏற்றுவான் என்று கணித்து அதைத் துணிந்து கூறுகிறார்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது வழக்கு உரைஞரிடம் செல்லுவது தப்பாது; படம் நூறு நாள் ஓடினால் அதற்கு என்று விழாக் கொண்டாடுகிறார்கள். ஜோசியம். அவர்கள் பிழைப்பு ஓடிக் கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த விழாவும் கொண்டாடுவது இல்லை; என்றாலும் ஆரவாரம் இன்றிச் செல்வந்தர் தம் வீட்டுத் தாழ்வாரங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/37&oldid=1123449" இலிருந்து மீள்விக்கப்பட்டது