பக்கம்:படித்தவள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ராசீ


அவர்களுக்கு இடம் தந்து சாதகப் பலன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் கணித்துக் கூறுவதைப் பணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை. மறுப்புச் சொல்வதற்கு எதிர் காலம் வராது; முன் நின்று எதிர்ப்புச் சொல்லப் போவது இல்லை. இந்தத் தொழிலை என் நண்பர் தொழில் ரீதியாக ஏற்காவிட்டாலும் திக்கெட்டும் பரவிய புகழ் இவருக்கு ஒரு சந்தையை உண்டு பண்ணிவிட்டது. அட்வான்சு புக்கிங் செய்துவிட்டு ஆட்கள் அவரிடம் வந்து கொண்டிருந்தனர்.

நான் சொல்லுவேன் “உமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. யாருமே தம் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்போம் என்ற நம்பிகைகள் இருப்பது இல்லை. தேர்தல்கள் இருக்கும் வரை உங்களுக்கு நல்ல பிழைப்பு. ஜோசியனைக் கலக்காமல் கட்சி டிக்கட்டுகள் வாங்கமாட்டார்கள். வெற்றி பெற்றதும் ஐந்தாண்டு நீடிக்குமா என்று ஐயப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் அமைச்சர்கள் ஆகிவிட்டாலும் ஆட்டம் கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை. இவர்கள் எல்லாம் உம்மிடம் வந்துகொண்டே இருப்பார்கள். அதைவிட நடிகர்கள் நடிகைகள் அவர்களுக்குத் தம் நடிப்பு மீது நம்பிக்கை இருப்பது இல்லை. அப்படி இருந்தாலும் இந்த மக்களை நம்புவதற்கும் இல்லை; ரசிகர்கள் அவர்களை நம்ப முடியாது. அதனால் தம் நட்சத்திரப் பதவி நிலைக்குமா என்ற அச்சம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தத் தொழில் செய்தாலும் அதில் நிலைபேறு இருப்பது இல்லை. தொழிலுக்கு வந்தவர்கள் தங்கள் பதவி உயர்வு எப்போது என்று சதா கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/38&oldid=1123450" இலிருந்து மீள்விக்கப்பட்டது