பக்கம்:படித்தவள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

37


நிச்சயமற்ற நிலையில் உம் தொழில் நிச்சயம் வெற்றி பெறும்; அச்சமின்றித் தொடரலாம்” என்று ஊக்குவிப்பேன்.

அவர் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. காசு வாங்கினால் பலிக்காது என்பது அவர் நம்பிக்கை. போகட்டும் வட்டிக்கடை வைத்து ஈட்டிக்காரர் ஆகிப் பலர் சேட்டுகள் ஆகி வருவதைச் சுட்டிக் காட்டுவேன். அதை இப்படியாவது பெருக்கலாமே என்று அவருக்கு வழிகள் பேசிக் காலம் கடத்துவோம்.

“திரை வானமும் புது மழை பொழிகிறது. இனிமேல் உணர்ச்சி நடிகர்களுக்கு இடம் இல்லை. செயல் நடிகர்களுக்கே எதிர்காலம்; கராத்தே பயிற்சியாளரும் குத்துச் சண்டை வீரர்களும் இனிமேல் திரைப்படத்தில் தம் சாகசங்களைக் காட்ட முயல்வார்கள். அவர்களும் உம்மைக் கேட்டுக் கொண்டுதான் கால் வைக்கப் போகிறார்கள்” என்று பேசித் தூண்டுவேன்.

எவ்வளவு சொல்லியும் அவர் இதைத் தொழிலாக ஏற்று நடத்த முன் வரவில்லை. அவர் ஏதோ திட்டத்தைத் தீட்டுவது போல் எனக்குக் காணப்பட்டார்.

பேச்சை மாற்ற நினைத்தேன்; அதனால் அவன் மகன் முத்துவைத் தேர்ந்து எடுத்தேன்.

“முத்துக்கு என்ன வயது?”

“முப்பதுக்கு மூன்று குறைவு” என்றார்.

“நாற்பதுக்குப் பதின்மூன்று குறைவு என்று கூறி இருக்கலாமே” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/39&oldid=1123451" இலிருந்து மீள்விக்கப்பட்டது