பக்கம்:படித்தவள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவள்

41



“இன்று அடிப்பான்; நாளைக்குக் கொஞ்சுவான்; அது அவன் இஷ்டம். பொண்டாட்டி புருஷன் சண்டை” என்று கூறி அலுத்துக்கொண்டு போய்விடுவார்கள். மண் சிவக்காது. கண்தான் சிவக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“ஏன்′பா அவளை அடிச்சே?”

“சே! அந்தச் சுகம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒரு நாள் தொட்டுப் பாருங்க. உங்களுக்குச் சுகம் தெரியும்” என்றான்.

நாங்கள் ஏன் நிம்மதியாக இருக்கிறோம் என்று அவன் உபதேசம் செய்தான்.

“அடுத்தவள் ?”

“குடியைக் கெடுத்தவள்; ஒடுகாலி” என்றான்.

“இது என்ன நாற்காலி முக்காலிபோல இருக்கிறதே?” என்று கேட்டேன்.

“எனக்குத் தெரியாது” என்றான்.

என் நண்பர் புத்திசாலி; அதனால் இதற்கு விளக்கம் தந்தார்.

“ஓடுகின்ற காலை உடையவள் ஒடுகாலி. கை மாறுவாள்; ஆள் மாறுவான்; அவள் ஒரு இடத்தில் நிலைத்து இருக்கமாட்டாள்” என்று விளக்கம் தந்தார்.

‘Rolling Cup’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அதுபோல் இது இருக்கிறது என்று கூறி விளங்கிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/43&oldid=1129733" இலிருந்து மீள்விக்கப்பட்டது