பக்கம்:படித்தவள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



- 5 -

பிறைமதியை ஜோசியர் மகனுக்குப்பேசி முடிப்பதா கதை சொல்பவர் மகன் வேலுசாமிக்குக் கட்டி வைப்பதா என்று இருபால் சென்றது கதை சொல்பவர் நெஞ்சு. “தேய்புரிப் பழங்கயிறு போல்” என்ற சங்க இலக்கிய உவமை இங்கு இடம் பெறுகிறது. இதுவே கதையில் புகுத்தப்படும் கதைப் போராட்டம்; நிகழச்சிப் போராட்டம்.

- 6 -

முத்து எழுதிய காதற் கடிதம் அது அவள் கை தவறிக் கீழே விழுகிறது; கதைசொல்பவர் எடுக்கிறார். பின் அவர் கூறுவது நயம் மிக்கதாக அமைகிறது.

“அதை எடுத்தேன்; கொடுத்தேன்; ‘எடுக்கவோ உன் கையில் சேர்க்கவோ’ என்றேன்” என்கிறார். ‘அவள் சிரித்தாள்’. இச்சொற்றொடர் இலக்கியத் தாக்கம் என்பது சுட்டப்படுகிறது.

- 7 -

‘எதையும் ஆர அமரச் சிந்தித்தே என் வாழ்வை அமைத்துக் கொள்வேன்’ என்கிறாள் பிறைமதி.

“அவசரப்படவேண்டாம்” என்று கூறி அவள் அவரைத் தடுத்து நிறுத்துகிறாள்.

“அவசரப்பட வேண்டாம்” என்று அவள் அவரிடம் கூறியது எனக்கு இட்ட அறிவுரையாகப் பட்டது” என்கிறார் கதை சொல்பவர்.

– 8 -

கதையில் ஒரு இடைவெளி, பண்டம் விற்கும் வனிதையின் சந்திப்பு மீண்டும் இடம் பெறுகிறது.

அவள் தன் பிள்ளைகளைப் படிப்பித்தலில் ஏற்படும் சிரமங்களைக் கூறுகிறாள். “காதில் மூக்கில் என்ன ஒன்றுமே காணோமே” என்று கேட்கிறார் கதை சொல்பவர்.

“அவற்றை அடகு வைத்து விட்டேன்; வட்டி முழுகிப் போகும்போது எப்படியாவது மீட்பேன். மறுபடியும் அவற்றை அனுப்பிப் பள்ளிக்கூடம் படிக்க வைப்பேன். இப்பொழுது பாடம் படித்துக் கொண்டிருக்கிறது” என்று விளக்கம் தருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/7&oldid=1123419" இலிருந்து மீள்விக்கப்பட்டது