பக்கம்:படித்தவள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ராசீ



“படிக்கிறாள் சம்பாதிக்கிறாள்” என்று என்னிடம் படித்துப் படித்துச் சொல்கிறாள்.

என் மனம் ஊசல் ஆடியது. அவள் முத்துவுக்குத்தான் என்று உள்மனம் அறிவுறுத்தியது. அவன் செல்ல மகன்; அண்மையில் பழகியவன்; இளகியவன்; தோற்றமும் ஏற்றமும் உடையவன்; என் மகன் நல்லவன்; சராசரி; ஏதோ தேர் ஒடும்; கார் ஓடாது.

முத்துவின் மன நிலையை அறிய விரும்பினேன். அதற்குள் அவர்களுக்கு ஒருபெரிய சரிவு ஏற்பட்டுவிட்டது. இருபது லட்சம் நாசமாகி விட்டது. வாங்கி வந்த இயந்திரம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.

“சாவைப்பற்றி முன் கூட்டி அறிந்தவர்கள் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சலனம் அற்றுச் செயல்பட்டனர். எதற்காக உழைப்பது என்று சோர்ந்து விட்டனர். இது சமூக எதிரி; வாழ்க்கைக்கு முரண் என்பதால் தடை செய்யப்பட்டு விட்டது.

இயந்திரம் துப்புத் துலக்க வந்தது. அது துப்புப் பிடித்துவிட்டது அவர் மனம் உடைந்துவிட்டார் “ஆயுள் நீட்டிப்புக்குத் தரும சிந்தனை செயல் இருந்தால் போதும்” என்றேன்.

“யார் சொன்னது” என்றார்.

“நம் அற நூல்கள்” என்றேன்.

“இது தெரிந்திருந்தால் இந்தக் கருவிக்கு நான் கருவியாகி இருக்கமாட்டேன்” என்று வருந்திக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/76&oldid=1283808" இலிருந்து மீள்விக்கப்பட்டது