பக்கம்:படித்தவள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

79



“இந்தச் சாதி என்ற நீதி எங்களை நுழைய முடியாதபடி சதி செய்கிறது. பிற்பட்டவள் என்று சொல்லிக் கொண்டு முற்பட்டுச் செல்ல விரும்பவில்லை” என்றாள்.

“அறிவில் போட்டியிட விரும்புகிறேன்; சலுகைச் சரிவில் தாழ்ந்து எழ விரும்பவில்லை” என்றாள்.

“சாதியைக் காட்டாமல் உன் திறமையை மட்டும் காட்டி அரசு பணியில் இடம் பெறலாமே” என்றேன்.

“என் தாய்க்கு நான் ஆதரவு. அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். நான் தலயாத்திரை செல்ல அவர்கள் உடன்வரமாட்டார்கள்” என்று விளக்கினாள்.

“அதற்குக் காரணம்?..”

“என் தாய் இந்த வகையில் ஒரு பேய்; அப்பாவின் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாக நம்புகிறாள்; அவளுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்” என்றாள்.

“அவர் மனநிலை சரி இல்லையா? நீ அப்பாவின் ஆவியோடு பேசி இருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“பாவிகளோடு ஆவிகள் வந்து பேசமாட்டார்” என்று சோகங் கலந்த குரலில் தன் சோர்வினைத் தெரியப்படுத்தினாள்.

“நாளைக்கு ஒருவனைக் கட்டிக் கொண்டால் அந்தக் காளையின் பின் போக வேண்டியது தானே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/81&oldid=1284164" இலிருந்து மீள்விக்கப்பட்டது