பக்கம்:படித்தவள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

81



14

“எத்தனையோ நற்சான்றுகள் பெற்றிருக்கிறேன்; விளையாடி அல்ல; எதுவும் செய்யாமல்; அதற்குப் பெயர் நல்லவர் என்பது; இப்பொழுது என் வருங்கால மருமகளிடம் அதே பட்டத்தைப் பெறுகிறேன். ஒருவரைத் தெரிந்து கொள்ள ஓரிரு சொற்கள் போதும். எனக்குத் திமிர் ஏறியதால் நிமிர்ந்து நடந்தேன்.

களத்தில் பண்ணையார் மகனைச் சந்திப்பது என்று முடிவுக்கு வந்தேன். அவனுக்கு முலை முடுக்கில் கொஞ்சம் நஞ்சம் ஆசை ஏதாவது வைத்திருந்தால் அதை அழிப்பது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.

பண்ணையார் சுதந்திரமான ஒரு தொழிலை நடத்தித் தன் மகனுக்கு ஒரு வாழ்வு அமைக்கத் திட்டமிட்டார், அரசுவேலை; அதை அடைய அரசியல் செல்வாக்குத் தேவைப்படுகிறது என்று சொல்கிறார்கள்; அதன் விலை இப்பொழுது கூடிக்கொண்டே போவதாகக் கேள்வி. வாங்க முடியாது என்று கைவிட்டுவிட்டார்.

சுயவேலைத் திட்டம் தவிர வேறு எந்தப் போக்கும் இல்லை; அதற்கு வெறும் பெருத்தனம் மட்டும் போதாது; மூலதனமும் தேவைப்பட்டது. அதனை மூளையில்லாமல் முடித்துவிட்டார். பிறருக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்த அவர் தனக்குக் கணிக்கும் ஆற்றல் இழந்து விட்டார்.

எதிர்பாராமல் முத்துவின் தாய் சறுக்கிவிழுந்து கால் எலும்பை நொறுக்கிக்கொண்டாள். சாய்ந்து நடந்து தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/83&oldid=1284284" இலிருந்து மீள்விக்கப்பட்டது