பக்கம்:படித்தவள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

85




“முதிர்ச்சி உடைய நான் அவனுக்கு எப்படி முட்டுக் கட்டையாக முடியும். என் தீவினைக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பெரியோர்கள் வைத்த சொத்தைப் பூஜியம் ஆக்கிவிட்டேன்; அது குடும்பச் சொத்து; அதை எனக்குத் தொட உரிமை இல்லை. பெருமைக்குப் பாடுபட்டு அவனைச் சிறுமையில் நிறுத்தி வைத்து விட்டேன். நான் எந்த முகம்கொண்டு அவனைத் தடுத்து நிறுத்த முடியும்.

“அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடிக் காலில் கட்டுப் போட்டிருந்தால் அவன் அதை வெட்டிக் கொண்டு போய் இருக்க முடியாது. எந்தப் பெண்ணும் என் கண்ணில் தட்டுப்படவில்லை” என்று அவர் ஒரு முதிய கோவலனாகக் காட்சி அளித்தார்.

குன்றுபோன்ற சொத்தைக் குலைத்த நிலையில் அவர் எனக்கு ஒரு கோவலனாகக் காட்சி அளித்தார். அவனும் இப்படித்தான் கண்ணகிக்குத் தான் செய்த அநியாயத்தை அடுக்கிச் சொல்லிக் கடந்ததற்கு வருந்தினான்.

“சென்றது இனி மீளாது” என்று பாரதியின் பாஷையில் அவருக்கு ஆறுதல் கூறினேன்.

“படித்த பெண் என் எதிர் வீடு, அவளை முடித்துவிடலாம்” என்று கூறினேன்.

“மிக்க மகிழ்ச்சி. அவள் வேலைக்குப் போகிறாளா? வேண்டியதைச் சம்பாதிக்கிறாளா?” என்று கேட்டார்.

“நிரந்தரமான வேலை; சுதந்திரமான போக்கு; அவளை எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/87&oldid=1342827" இலிருந்து மீள்விக்கப்பட்டது