பக்கம்:படித்தவள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ராசீ



வீடுமர் சபதம் போல இருந்தது.

“மற்றொன்று என் வேலையை விட்டு விட்டு மற்றவர்களைச் சார மாட்டேன்; கட்டியவன் கனக மாளிகையில் வைத்தாலும் பூசைக்குரிய மலர்களை நானே தேடிப் பறிப்பேன். தொழில் என் தெய்வம்” என்றாள்.

என்னை விட்டு அவள் விலகுவது போலத் தெரிந்தது.

வேலுவை விசாரித்ததும் என்னைப் பாராட்டிப் பேசியதும் எந்த வித சார்பும் கொண்டவை அல்ல என்பதை என்னால் உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முத்துவிடம் நான் பேசி இருக்கக் கூடாது.

ஒரு வேளை அவன் அவளைக் காதலித்து இருக்கலாம்; அதை நான் கெடுத்து இருக்கக் கூடாது. என் மனசு என்னைச் சட்டது.

வாய்விட்டு அவளிடம் கூறிவிட்டேன்.

“நான் ஒரு தவறு செய்து விட்டேன்; மன்னிக்க வேண்டும்” என்றேன்.

“எந்தத் தவறும் செய்யவில்லை; நீங்கள் முத்துவிடம் பேசியது எனக்குத் தெரியும்” என்றாள்.

எனக்கு அதிர்ச்சி தந்தது.

“அதனால்தானே அவன் மனம் முறிந்து வெளி நாடு செல்கிறான்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/90&oldid=1342855" இலிருந்து மீள்விக்கப்பட்டது