பக்கம்:பட்டத்தரசி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்தர்சி

வேள்வியிலே வளர்ந்தவர்கள், பழமை யான வேதத்தைப் போற்றிடுவர். ஆனல் நாமோ, கேள்வியிலே வளர்ந்தவர்கள்; நமக்கோ, நல்ல கேள்விகளே; பலாச்சுளைகள், பருகும் செங்தேன் 1 நாள்கிழமை தனில்இல்லை, மனிதன் வெற்றி, நன்ருக உழையுங்கள் சிந்தி யுங்கள்; ஆள்பவரின் ஐயத்தைத் தீர்த்து வைத்தால், ஆயிரம்பொன், வென்றவர்க்கு வந்து சேரும்!

இறப்பதுவும் பிறப்பதும், வையங் தன்னில், எல்லோர்க்கும் பொதுநிகழ்ச்சி; மனிதன் வாழ்வில்; திறமைகள்தான், உண்மைவர லாறு ஆகும். சென்றதிசை, நின்றவிடம், மண்ணில், விண்ணில், இறவாத புகழ்வைத்தல் வேண்டும். வாழ்வு, இனிப்பதற்கும், சிறப்பதற்கும், செல்வம் வேண்டும். மறந்துவிடக் கூடியதா இந்த எண்ணம்? மறுநாள்யாம் சந்திப்போம்-என்ருன் கீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/30&oldid=662109" இலிருந்து மீள்விக்கப்பட்டது