பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் & 83 + 4. திருஎகம்ப விருத்தம்' இத்தலைப்பில் கிடைக்கும் ஏகாம்பரநாதனைப் பற் றிய விருத்தம் அற்புதமாக அமைந்துள்ளது. அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னை எத்தனை எத்தனை சென்மமோ மூடின் ஆய்அடி யேனும் அறிந்திலேன் இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே இதனைப் படித்து அநுபவித்து மகிழ்ந்தால் அந்த அநுப வமே அற்புதமாக இருக்கும். நாம் எடுக்கும் பல்வேறு பிறப்புகளில் இவை நேரிடுகின்றன. ஒரு பிறப்பில் உள்ளவை அடுத்த பிறப்பில் இல்லாது போகின்றன. 5. தலங்களைப் பற்றிய பாடல்கள் இத்தலைப்பில் உள்ளவை யாவும் கட்டளைக் கலித்துறை, விருத்தம், வெண்பா முதலான பலவகை யாப்பில் அமைந்தவை. பொது என்ற தலைப்பில் பல பாடல்களும் தாயாருக்குத் தகனம் செய்தபோது பாடிய பாடல்களும் உள்ளன. இப்படிக் கிட்டத்தட்ட 150 பாடல்கள். இவற்றை யாப்பு வரிசையில் ஆழ்ந்து நோக்கி அநுபவிப்போம். 1. கட்டளைக் கலித்துறை (1) திருத்தில்லை. இத்தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில: (அ) சோறுஇடும் நாடு துணிதரும் குப்பைத்தொண்டு அன்பரைக்கண்டு ஏறிடும் கைகள் இறங்கிடும் தீவினை எப்பொழுதும்