பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 84 + பட்டினத்தடிகள் நீறுஇடும் மேனியர் சிற்றம் பலவர் நிறுத்தம்கண்டால் ஊறிடும் கண்கள் உருகிடும் நெஞ்சம்என் உள்ளமுமே (2) அம்பலவன் திருநடனம் நேரிலே காணப் பெற் றோர்க்குக் கிடைக்கும் பலனை இப்பாடல் காட்டுகின் நிறது. (ஆ) ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஒரம் உரைப்பவர்பால் கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெம் கோபம்நெஞ்சில் நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்குஎன்று தேடாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே (4) பாராமல் ஏற்பவர்க்கு இல்லை.என் னாமல் பழுதுசொல்லி வாராமல் பாவங்கள் வந்துஅணு காமல் மனம்அயர்ந்து பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச் சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (5) கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல் குத்திரம் கோள்களவு கல்லாமல் கைதவ ரோடுஇணங் காமல் கனவினும்பொய் சொல்லாமல் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (6)