பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 86 & பட்டினத்தடிகள் காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வழி ஆட்டுவிப் பானும் ஒருவன் உண் டேதில்லை அம்பலத்தே. (11) உடுப்பானும் பால்அனம் உண்பானும் உய்வித்து ஒருவர்தம்மைக் கெடுப்பானும் ஏதுஎன்று கேள்விசெய் வானும் கெதிஅடங்கக் கொடுப்பானும் தேகிஎன்று ஏற்பானும் ஏற்கக் கொடாமல்நின்று தடுப்பானும் நீயலை யோதில்லை ஆனந்தத் தாண்டவனே. (14) வித்தாரம் பேசினும் சோங்குன றினும்கம்பம் மீதிருந்து தத்தாளன்று ஓதிப் பவுரிகொண்டு ஆடினும் தம்முன்தம்பி ஒத்தாசை பேசினும் ஆவதுஉண் டோதில்லை உள்நிறைந்த கத்தாவின் சொற்படி அல்லாது வேறுஇல்லை சன்மங்களே (15) 'செய்பவனும் செய்விப்பவனும் எல்லாம் அவன்; எல்லாச் செயல்களும் அவனுடையனவே என்ற கருத்தை இந்த மூன்று பாடல்களும் பறை சாற்றுகின் றன. இக்கருத்தை அரண் செய்வது போல், தெய்வச் சிதம்பர தேவா!உன் சித்தம் திரும்பிவிட்டால் பொய்வைத்த சொப்பன மாம்மன்னர் வாழ்வும் புவியும்எங்கே? மெய்வைத்த செல்வம்எங் கே?மண்ட லிகர்தம் மேடைஎங்கே? கைவைத்த நாடக சாலைளங் கே? இது கண்மயக்கே (13) என்ற பாடலின் கருத்தும் அமைகின்றது.