பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் # 89 + ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவுஅழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதுஒன்று வேண்டுவல்யான் செய்யும் திருவொற்றி யூர்உடை யீர்திரு நீறும்இட்டுக் கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத்து ஒதவும் கற்பியுமே (1) சுடப்படு வார்அரி யார்புரம் மூன்றன்மை சுட்டபிரான் திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில் நடப்பவர் பொற்பதம் நந்தலை மேல்பட நன்கு உருண்டு கிடப்பது காண்மன மேவிதி ஏட்டைக் கிழிப்பதுவே (2) இவை இரண்டும் கற்பகக் கனிகள். (4) திருவிடைமருதூர். இத்தலம் பற்றி இரண்டு பாடல்கள். காடே திரிந்துஎன்ன காற்றே புசித்துஎன்ன கந்தைசுற்றி ஒடே எடுத்துஎன்ன உன்அன்பு இலாதவர் ஓங்குவிண்ணோர் நாடே இடைமரு தீசர்க்கு மெய்அன்பர் நாரியர்பால் வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டுஇன்பம் மேவுவரே (1) என்பது இவற்றின் முதற்பாடல். எந்த நிலையிலும் இறை அன்பு உள்ளவர் இருக்கலாம்.