பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 90 & பட்டினத்தடிகள் (5) திருக்கழுக்குன்றம்: ஒரே ஒரு பாடல் கொண்டது. காடோ செடியோ கடற்புற மோகன மேமிகுந்த நாடோ நகரோ நகர்நடு வோநல மேமிகுந்த வீடோ புறந்திண்ணை யோதமி யேன்உடல் வீழும்இடம் நீள்தோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின்பதமே. ஒன்றாயினும் ஒப்பற்ற பாடல். எங்கு இருப்பினும் தம் சிந்தை இறைவன் திருப்பாதத்தையே சிந்தித்துக் கொண் டேயிருக்கும் என்பதைத் தெளிவிக்கின்றார் அடிகள். (6) திருக்காளத்தி: இத்தலம் பற்றி ஆறு பாடல்கள். (அ) பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு செத்துக் கிடக்கும் பிணத்தரு கேஇனிச் சாகும்பினங்கள் கத்தும் கணக்குஎன்ன காண்கயி லாபுரிக் காளத்தியே (1) என்பது முதற் பாடல். உயிர் பிரிந்த உடலை செத்த பினம் என்றும் உயிர் உள்ள உடலை 'சாம் பிணம்' என்றும் வேறு பிரித்துக் காட்டுகின்றார் அடிகள். பத்து வயதுப் பாலகன் இறந்த போதும், திருமணம் ஆனவு டன் தம்பதிகளில் எவர் ஒருவர் பிரிந்தாலும், அறுபது