பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 92 { பட்டினத்தடிகள் (ஆ) பொன்னால்ப்ர யோசனம் பொன்படைத் தாற்குஉண்டு பொன்படைத்தோன் தன்னால்ப்ர யோசனம் பொன்னுக்கங்கு ஏதுஉண்டு.அத் தன்மையைப்போல் உன்னால்ப்ர யோசனம் வேனதுஎல் லாம்.உண் டுனைப்பணியும் என்னால்ப்ர யோசனம் ஏதுஉண்டு காளத்தி ஈச்சுரனே (2) இப்பாடலைச் சிந்திக்கும்போது வைணவத்தின் ஒரு கொள்கை நினைவிற்கு வரும். ஈசுவர இலாபம் சேதந னுக்கா? சேதந இலாபம் ஈசுவரனுக்கா?’ என்பதே அது. 'சேதந இலாபம் தான் ஈசுவரனுக்கு’ என்பதாக முடிவு கட்டினர் வைணவ ஆசாரியர்கள். திருவாய்மொழியில் (9.6), திருஅருள் செய்பவன் போலஎன் னுள்புகுந்து உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் (5) 'வாரிக் கொண்டு உன்னை, விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை யொழியஎன் னில்முன்னம் பாரித்து தான்என்னை முற்றப் பருகினான் (10) என்ற பாசுரங்களையும், 'முன் பாசுரத்தில் உணவு உண்டதைச் சொல் லிற்று; உண்டவனுக்குத் தண்ணிர் வேண்டுமல்லவா? அதனைப் பருகினது இப்பாசுரத்தில் சொல்லுகிறது’ என்ற உரைக் குறிப்பையும் நோக்கும்போது இக்கருத்து