பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 96 4 பட்டினத்தடிகள் (இ) வருந்தேன் பிறந்து பிறந்து மயக்கும் புலன்வழிப்போய்ப் பொருந்தேன் நரகில் புகுகின் றிலேன்புகழ் வாரிடத்தில் இருந்தேன் இனிஅவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செலுத்தாம் அருந்தேன் அருந்துவன் நின்அரு ளால்கயி லாயத்தனே (8) என்ற பாடலில் 'பிறவிப் பிணி முன்வினைப் பயனால் நேரிட்டாலும் அப்பிணியை நின் அஞ்செலுத்து ஒதுவ தால் போக்கிக் கொள்வேன்’ என்று சொல்லி மகிழ்கின் றார் அடிகள். (8) மதுரை. இத்தலத்தைப் பற்றி ஒரே ஒரு பாடல். இது சொக்கநாதப் பெருமானை வேண்டும் போக்கில் அமைந்துள்ளது. விடப்படு மோஇப் பிரபஞ்ச வாழ்க்கையை விட்டுமனம் திடப்படு மோநின் அருள்இன்றி யேதின மேஅலையக் கடப்படு மோஅற்பர் வாயிலிற் சென்றுகண் ணித்துயிலப் படப்படு மோசொக்க நாதா! சவுந்தர பாண்டியனே (8) இதில் பல்வேறு நிலைகளில் ஏற்படும் தம் இவ்வகில வாழ்க்கையை எண்ணி அங்கலாய்க்கின்றார். (9) பொது: இத்தலைப்பில் 61 பாடல்கள் உள்ளன. இவை இவர்தம் உலக வாழ்க்கையைப் பல்வேறு வித மாகச் சித்திரிக்கின்றன. அரிய கருத்துகள் எளிமையாக விளக்கப் பெறுகின்றன. சிலவற்றில் ஆழங்கால் பட்டு மகிழ்வோம்.