பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 98 } பட்டினத்தடிகள் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வசதிகளுடன் இறைவனும் கூட இருந்தும் மானுடம் கெட்டழிகின் றதே என்று வருந்துகின்றார். (ii) ஈசன் இருப்பிடம்: ஈசனது இருப்பிடமாக நேரல் முறையில் சுட்டப்பெற்றிருப்பினும் நேர் முறையில் சுட்டுவது இது. சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லிலும் மாசுஅற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்துவிட்டோர் இல்லிலும் அன்பர் இடத்திலும் ஈசன் இருக்கும்இடம் கல்லிலும் செம்பிலு மோஇருப் பான்னங்கள் கண்ணுதலே (6) இப்பாடலைக் கேட்டவர்களில் இதன் நயம் உணராமல் பட்டினத்தடிகள் உருவ வழிபாட்டைக் கடிபவர் எனத் தவறாகப் பிரசாரம் செய்வோரும் உளர். (ii) உலகோருக்கு உபதேசம்: நான்கு பாடல்களில் இதனைக் காணலாம். ஒன்றுஎன்று இரு:தெய்வம் உண்டுஎன்று இரு:உயர் செல்வம்எல்லாம் அன்றுஎன்று இருபசித் தோர்முகம் பார்.நல் லறமும் நட்பும் நன்றுஎன்று இரு:நடு நீங்காம லேநமக்கு இட்டபடி என்றுஎன்று இரு:மன மே!உனக் கேஉப தேசம்இதே. (20) இஃது இறைவன் இருப்பைக் காட்டுவது. என்செயல் ஆவது யாது.ஒன்றும் இல்லை இனித்தெய்வமே