பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X பெண்ணைத் துய்ப்புக்கு உரிய பொருளாக ஆடவர் நினைக்கலாகாது என்பதே பட்டினத்தார் அருணகிரியார் முத லிய ஞானிகள் உள்ளக்கிடக்கை. இளம்பருவத்தினரைக் குறித் தும் மற்றையோரைப் பொதுவில் நோக்கியும் பெண் பொன் பித்தினைப் போக்குவதற்கு இவ்வுத்தியை முன்சொன்ன அரு ளாளர் பலரும் கைக்கொண்டனர். அதே சமயத்தில் பெண்ணைத் தாயாகப் பார்க்கப் போதிக்கின்றார் பட்டினத்தார் என்பது நன்கு உணரக் கிடக் கின்றது. ‘வெட்டாத சக்கரம் என்னும் பாட்டின்மூலம் பட்டி னத்தார் யோக மார்க்கத்தைப் பின்பற்றியவர் என்பது நன்கு புலனாகின்றது. சொல்லினும் வேதச் சுருதியினும் என்ற பாட்டின்மூலம் அது உறுதிப்படுகின்றது. பட்டினத்தடிகள் என்று ஒரே பெயரில் வழங்கப்பெறும் ஞானியாரின் வரலாறுகளையும் அவர்களின் அருளிச்செயல்க ளையும் ஒருசேர யாவரும் கற்று உணரும் வகையில் எளிய இனிய தமிழ்நடையில் ஆய்வுநோக்கில் தந்துள்ளனர் பேராசி ரியர் சுப்புரெட்டியார். அவர்களையும் இந்நூலையும் பாராட்டி மகிழ்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். 104, அண்ணாநகர் கிழக்கு எஸ்.தியாகராஜன் சென்னை - 600 102.