பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் + 103 + தினையாம் அளவுஎள் அளவுஆ கினும்முன்பு செய்ததவம் தனைஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12) ஏனையவை ஒர் அளவு மட்டும் இருக்க முன் செய்த தவம் ஒரு தினை அல்லது எள் அளவு இருந்தா லும் அது பரலோகம் கிட்டச் செய்யும் என்பது அடிகள் காட்டும் ஒளிவிளக்கு. (VI) உண்மை ஞானம்: இதுபற்றி இரண்டு பாடல்கள்: பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்துஇட்ட பிச்சைஎல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கையரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே (35) இப்பாடல் உண்மை ஞானம் தெளிந்தவரின் தோற் றத்தை இயம்புவது. இத்தகையவர் செயலை, உளிஇட்ட கல்லையும் ஒப்பு:இட்ட சாந்தையும் ஊத்தைஅறப் புளிஇட்ட செம்பையும் போற்றுகி லேன்உயர் பொன்எனவே ஒளிஇட்ட தாள்.இரண்டு உள்ளே இருத்துவது உண்மைஎன்று வெளியிட்டு அடைத்துவைத் தேன்.இனி மேல்ஒன்றும் வேண்டிலனே (6.1) என்ற பாடல் செப்புகின்றது. இறைவனது அடியி ணையை உள்ளத்தில் அடைத்து வைத்ததாகவும், ஆத லால் இதன் பிறகு தமக்கு ஒன்றும் தேவை இல்லை என்பதாகவும் உரைக்கின்றார் அடிகள்.