பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 104 + பட்டினத்தடிகள் (vili) உண்மை ஞானத்தின் பயன்: இதனை ஒரு பாடல் உரைக்கின்றது. அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்புஒழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மிஇரு கைத்தலை மேல்வைத்து அழும்மைந் தரும்சுடு காடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே (13) இதனால் தெளிந்தவர்கள் எல்லாம் ஒரு நிலையில் நின்றுவிட, தொடர்ந்து வருவன அவரவர் செய்த புண் னியமும் பாவமும் ஆகும் என்பதை அறிவார்கள். (ix) இதனைத் தொடர்வன: என்பது பற்றி நான்கு பாடல்கள் நவில்கிறன: உரைக்கைக்கு நல்ல திருஎழுத்து ஐந்துஉண்டு; உரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறும் உண்டு; தெருக்குப்பையில் தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு;எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்துகொண் டேன்;குறை ஏதும் எனக்குஇல்லையே (32) 'உண்மை ஞானம் தட்டுப்பட்டதும் நாவினால் நவிற்ற ஐந்து எழுத்தும் இதனைத் தொடர்ந்து உட லெங்கும் பூசிக் கொள்ளத் திருநீறும், தரிக்கக் கரித்துணி ஆடையும் இருப்பதை அறிந்து சாதி வேறுபாடு கருதா மல் பிச்சை துணிந்து ஏற்பதைத் தெளிந்தேன். இவற் றால் எனக்குக் குறையொன்றும் இல்லை' என்பதைத் தெரிவிக்கின்றார்.