பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் 4 107 4 தம் செயல்களைச் சோதிக்கும் பழக்கமுடைய அடி கள் தாம் நடைமுறைப் பிறப்பில் செய்த தீவினை ஒன்றும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு முற்பிறப்பில் செய்த தீவினைதான் தம்முடைய இன் றைய நிலைக்குக் காரணம் என்பதை அறுதியிடு கின்றார். (xi) நிலையாமை: உலகிலுள்ள பொருள்கள் யாவும் உண்மையல்ல, உருவெளித் தோற்றமே என்று கூறும் அற்புதமான பாடல் ஒன்று உள்ளது. மைஆடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ ஐயாநின் மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துஉள்ளே மெய்யா இருந்தது நாள்செல நாள்செல வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே (52) என்ற பாடலின் அருமைப்பாட்டைப் பலமுறைப் படித் துப் படித்து அநுபவித்து மகிழலாம். (xi) மனம் பற்றிய பாடல்கள்: கவிஞர்கள் தம்மை வேறாகவும் மனத்தை வேறாகவும் பிரித்துக் கொண்டு பாடும் மரபு ஒன்று உண்டு. அம்மரபையொட்டிப் பல L_! fᎻ Ꮏ__ 6a ᏑᏐ6YᎢ : வினைப்போக மேஓரு தேகம்கண் -. டாய்வினை தான்ஒழிந்தல் தினைப்போது அளவும்நில் லாதுகண் டாய்சிவன் பாதம்தனை நினைப்போரை மேவு நினையோரை நீங்கிஇந் நெறியினின்றால் உனைப்போல் ஒருவர் உண்டோமன மேஎனக்கு உற்றவரே (பொது-7)