பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 108 + பட்டினத்தடிகள் தன்னோடு ஒத்து நன்னெறியில வாழத் துணை புரியும் மனத்தைப் பாராட்டி மகிழ்கின்றார். தமக்கு உலக வாழ்வில் தேவையாக உள்ள எல்லா வசதிகளையும் பற்றி மூன்று பாடல்கள்: ஆறுஉண்டு தோப்பு:உண்டு அணிவீதி அம்பலம் தானும் உண்டு நீறுஉண்டு கந்தை நெடுங்கோ வணம் உண்டு நித்தம்நித்தம் மாறுண்டு உலாவி மயங்குநெஞ் சேமனை தோறும்சென்று சோறுஉண்டு துங்கிப்பின் சும்மா இருக்கச் சுகமும்உண்டே (16) உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெயில் ஒடுங்கிவந்தால் தடுக்கப் பழைய ஒருவேட்டி உண்டு சகம்முழுதும் படுக்கப் புறந்திண்ணை எங்குஎங்கும் உண்டு பசித்துவந்தால் கொடுக்கச் சிவன் உண்டு நெஞ்சே நமக்குக் குறைவில்லையே (17) மாடுஉண்டு கன்று உண்டு மக்கள்.உண்டு என்று மகிழ்வதெல்லாம் கேடுஉண்டு எனும்படி கெட்டுவிட் டோம்இனிக் கேள்மனமே ஒடுஉண்டு கந்தைஉண்டு உள்ளே எழுத்துஐந்தும் ஒதவுண்டு தோடுஉண்ட கண்டன்அடியார் நமக்குத் துணையும்.உண்டே (18) என்ற பாடல்களில் இவை காட்டப் பெற்றுள்ளன. மேலும் ஒதுவதற்கு ஐந்தெழுத்தும் அடியார் துணை யும் இருப்பதை நினைந்து மகிழ்கின்றார்.