பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வரும்அப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேல் சலஞ்செய்த நாரைப் பதிஅரன் தன்னைக் கணிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றே!உன்னை வாழ்த்துவனே." - நம்பியாண்டார்நம்பி என்னுடைய கல்லூரி வாழ்க்கை திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் (1934-39) நடைபெற்றது. அருள்தந்தை ஜெரோம் டி செளசா என் ஆங்கில பேராசிரியர்; அவர் வாரம் ஒரு மணி நேரம் நல்லொழுக்க வகுப்பு எடுத்து நடத்துவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். அவர் கூறிய கருத்துகளில் சில என் பிஞ்சு மனத்தில் ஆழப் பதிந்தன. அக்காலத்தில் விடுமுறை நாட்களில் (புதன், ஞாயிறு) உணவு விடுதியில் உணவு கொண்டு திரும்பும்போது வழியில் இருந்த மாவட்ட வாரிய நூல் நிலையத்தில் ஒரு மணி நேரம் நூல்களை புரட்டிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந் தேன். அப்படிப் புரட்டுவதில் தாயுமானவர், பட்டினத்தார். திரு. வி.க. நூல்கள் பழக்கமாயின. முன்னவர் இருவர் நூல்களிலுள்ள ஒரு சில பாடல்கள், கண்ணிகள் என் கவனத்தை ஈர்த்தன. அவற்றில் மனப்பக்குவ நிலையில் ஈடுபட்டதாகச் சொல்ல முடி யாது. ஏதோ ஆன்மிகத் துறையில் பக்குவம் ஏற்படாத ஒரு கல்லூரி மாணவன் நிலையில் அவற்றில் ஈடுபாடு கொள்ள நேர்ந்தது. தாயுமானவர் பாடல்களில் ஒரு சில கண்ணிகளை வண்ணக் காம்புக ளைக் கொண்டு அழகாக எழுதி என் அறையிலும் எங்களுரைச் சேர்ந்த சகோதரர் இருவரால் நடத்தப் பெற்றுவந்த நீராகார மடத்தின் 1. திருநாரையூர் விநாயகர் திருவிரடடை மணிமாலை - 8