பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 118 + பட்டினத்தடிகள் களில் தான் அது உண்டு. அதற்காக 'இராக்கதர்களைப் படைத்துள்ளான் மனிதன்'. எனினும் பாடல் கருத்தை உள்ளத்தில் ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றது. (vi) முத்தர் மனம்: இதுபற்றியும் ஒரு பாடல்: எத்தொழிலைச் செய்தாலும் ஏதுஅவத்தை பட்டாலும் முத்தர் மனம்இருக்கும் போதே - வித்தகமாய்க் காதிவினை யாடிஇரு கைவீசி வந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான். (பொது-18) (ix) பிள்ளைப் பேறு: 'மக்கட் பேறு என்று வள்ளுவர் பெருமான் போற்ற, பிள்ளைப் பேற்றை அடிகள் வெறுப்பது வியப்பாக உள்ளது. மாலைப் பொழுதில்நறு மஞ்சள்அரைத் தேகுளித்து வேலை மினக்கிட்டு விழித்திருந்து - சூல்ஆகிப் பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை பித்துஆனாள் என்செய்வாள் பின். (9) இதற்குத் தாய் என்ன செய்வாள்? இது சூழ்நிலையால் ஏற்பட்டிருக்கலாம். பெண்குலத்தின்மீது பழி போடுவ தாக உள்ளது. இது. இது அடிகள் அருளிய பாடலாகத் தோன்றவில்லை. (20) அன்னையாருக்கு இறுதிக் கடன்: இதுபற்றிப் பத்துப் பாடல்கள். பத்தும் முத்தானவை. தாய்ப் பாசம் முற்றுந்துறந்த முனிவரையும் ஆட்டி வைக்கின்றது. ஆதிசங்கரரையும் அசைத்து விட்ட அற்புதப் பண்பல் லவா? பத்து மாதம் சுமந்த வயிறு. திருமணம் ஆகும் வரை சுவையான உணவை அன்பொழுக வழங்கிய கை. ஒரு சிலவற்றைக் காட்டுவேன்.