பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 120 + பட்டினத்தடிகள் வேகுதே தீஅதனில் வெந்துபொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்துஎடுத்த கை (8) முன்னை இட்டதீ முப்பு ரத்திலே பின்னை இட்டதீ தென்இ லங்கையில் அன்னை இட்டதீ அடிவ யிற்றிலே யானும் இட்டதீ மூள்க மூள்கவே (7)" எங்கோ தலப் பயணத்தில் இருந்தபோது அன்னையார் மரித்த செய்தியைக் கேட்டு ஒடோடி வந்து அன்னை யின் உடலைப் பச்சை வாழை மட்டை மேல் கிடத்தி "ஞானத்தி (பாட்டால்தி) எரித்ததாக வரலாறு. (21) திருவெண்காட்டுத் திருவிசைப்பா: இத்தலைப் பில் மூன்று விருத்தப் பாடல்கள் உள்ளன. முதல் இரண்டு பாடல்கள் இறைவனே ஏகநாயகனே' என இறுவன. மூன்றும் மும்மணிகள். மூன்றையும் தரு வேன். பூதமும் கரணம் பொறிகள்ஐம் புலனும் பொருந்திய குணங்கள்ஒர் மூன்றும் நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானுமாய் நிற்கும்நாள் உளதோ வாதமும் சமய பேதமும் கடந்த மனோலய இன்பசா கரமே ஏதும்ஒன்று அறியேன் யாதுநின் செயலோ இறைவனே ஏகநா யகனே (1) 5 வெணப கூட்டத்தில் விருத்தம் கலந்து விட்டது. விருததம எனும பாவினம்தான் உண்ர்ச்சிப் பிழம்பை எழுப்ப வல்லது.