பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii (காவிரியாற்றுக் கரையருகில் சாலையோரத்தில் இன்றளவும் இருந்து வருகிறது) சுவர்களிலும் எழுதி வைத்து மகிழ்ந்த துண்டு. இந்தப் பழக்கத்தால் ஏற்பட்ட தாக்கம்தான் பிற்காலத்தில் (1970க்கு மேல்) ஆன்மிகத் துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்தது போலும் என நீள நினைத்து பார்க்கின்றேன். ஆழ்வார் பெருமக்கள் அருளிச் செயல்களிலும் சைவ சமய குரவர் நால்வரின் அருளிச் செயல்களிலும் பல நூல்கள் (30க்கும் மேற்பட்டவை) எழுதி வெளியிட்ட பிறகு தாயுமா னவர் என்ற நூலை எழுதி வெளியிட்டு (நவம்பர் 2001) மகிழ்ந்தேன். இப்பொழுது பட்டினத்தடிகள் என்ற நூல் எழுதப் பெற்று வெளிவருகின்றது. ஒட்டுடன் பற்றுஇன்றி உலகைத் துறந்துசெல்வப் பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர்வது எந்நாளோ? ' என்ற கண்ணிதான் இந்நூல் எழுதத் துண்டியது. இக்காலம் ஆன்மி கத் துறையில் ஆழங்கால்பட்டு ஓரளவு மனப்பக்குவம் ஏற்பட்ட நிலை (அகவை 87). இச்சிறுநூல் ஆறு இயல்களாக அமைகின்றது. முதல் இயல் தோராணவாயில். இங்கு பருந்து நோக்காகச் சிலச் செய்திகள் சுட்டப்பெறுகின்றன. இந்த இயலில் செட்டிநாட்டுப் பகுதியில் மிகுந்த பண்பாட்டுடனும் மிகுந்த பக்தியுடனும் சைவப் பெருமக்க ளாக, ஒன்பது கோயில் பிள்ளையார்களைக் குலதெய்வமாகக் கொண்டு ஒரே குலத்தவர் போல் சிறப்புடன் வாழ்ந்து வரும் "நகரத்தார் பெருமக்கள் பட்டினத்தடிகளின் மரபில் வந்தவர்களே என்பது துணிவுடன் வற்புறுத்தப் பெறுகின்றது. 1. தா.பா. எந்நாட்கண்ணி - அடியார்வணக்கம் -5